• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகன்யா 

சினிமா

தமிழ் திரை உலகம் பன்முகத்தன்மை உள்ளவர்களை எப்போதும் கைநீட்டி வரவேற்று இருக்கிறது அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவும் அளித்திருக்கிறது
 நடிகை சுகன்யாவும் அது போன்று பன்முகத்தன்மை உடையவர்தான் சிறந்த பரதநாட்டிய கலைஞரான அவர் இசையமைத்து ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார் மேலும் குரல் கலைஞராகவும் இருந்திருக்கிறார் மேலும் அந்த காலத்தில் ரஜினியை தவிர்த்து அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார் 
 அவர் கமலஹாசன் உடன் இந்தியன் திரைப்படத்தில் நடித்திருப்பார் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அந்த படத்தின் கதாநாயகி என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம் தான் அதில் மாறுபட்ட மேக்கப் இவருக்கும் போடப்பட்டிருக்கும் 
அதுபோல விஜயகாந்த் ,சரத்குமார் ,கார்த்திக், பிரபு,சத்யராஜ் பாக்கியராஜ் என அன்று முன்னணியில் இருந்த அனைத்து நடிகர்களுடனும் நிறைய படங்கள் செய்திருக்கிறார் 
புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார் 
நல்ல உயரம், நல்ல நிறம் ,அழகிய கண்கள் ,இனிமையான குரல் போன்ற பல அம்சங்கள் இருந்ததால் அவர் ஒரு படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக கூட வருவார்
 பணக்கார பெண்ணாக வந்து கதாநாயகர்களிடம் வம்பு சண்டை போடும் பல வேடங்களையும் அவர் ஏற்று நடித்து இருக்கிறார்
சின்ன கவுண்டர், சக்கரை தேவன் போன்ற படங்களில் விஜயகாந்த் உடனும்
சத்யராஜுடன் வண்டிச்சோலை சின்னராசு, வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிச்சாமி ,சேனாதிபதி உடன்பிறப்பு ஆகிய படங்களிலும்
 சரத்குமாரோடு ஆதித்யன், கேப்டன் ராஜபாண்டி ,மகாபிரபு ஆகிய படங்களிலும் 
பிரபுவுடன் செந்தமிழ் பாட்டு, மிஸ்டர் மெட்ராஸ் ,சின்ன மாப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்
 இதை தவிர அரவிந்த்சாமி ,அருண் பாண்டியன், ராமராஜன், ரகுவரன் போன்றவர்களுடனும் நடித்திருக்கிறார் 
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்கள் என்றால் சின்ன கவுண்டரில் இவர் நன்கு ஸ்கோர் செய்தார் என்று சொல்ல வேண்டும் 
முக்கியமான கதாபாத்திரம் அதுபோலவே 
வால்டர் வெற்றிவேலிலும் பின்னாளில் தன் மைத்துனனாக செய்த தவறை பார்த்து அதை சொல்லக்கூடிய நேரத்தில் கண் பார்வை இழப்பது போன்ற கதை சிறப்பாகவே செய்திருப்பார் 
திருமதி பழனிச்சாமி படத்தில் இவர் ஒரு ஆசிரியராக வந்து ஒரு கிராமத்திற்கு படிப்புச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையில் சத்யா ராஜுடன் சேர்ந்து போராடுவது போன்ற படம் அதிலும் இவருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும்

 கமலோடு நடிக்க கிடைத்த இரண்டு படங்களுமே சிறப்பானது மகாநதியிலும் ஒரு ரன்னிங் ரோல் அதுபோல் இந்தியனிலும் அவருடைய போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பது போன்ற கதாபாத்திரம் அது அதை அனைத்தையும் சிறப்பாக செய்திருப்பார் 
பின் நாட்களில் அண்ணி அக்கா வேடங்களில் வந்தாலும் அவருக்கு இளமையான முகம் இருந்தபோதிலும் தன்னுடைய வயதை கருத்தில் கொண்டவர் அந்த வேடங்களை ஏற்றுக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும் 
இவர் இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் 
அழகி என்ற ஒரு ஆல்பம் வெங்கடாஜலபதி பற்றிய ஒரு பாடல் அமைந்த தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்
 அதேபோல் பரதத்தில் சிறந்தவர் பல்வேறு மேடைகளில் தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்
 தொலைக்காட்சி தொடரிலும் இவர் கணிசமாக செய்துள்ளார் 
சன் டிவியில் வெளியான ஜன்னல் மரபுக் கவிதைகளும் , அம்மாவுக்கு ரெண்டுல ராகு ,ஆனந்தம் ,சூப்பர் குடும்பம் ஆகிய தொடர்களிலும்
  கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா ,உறவுகள் சங்கமம் ராஜ் டிவி என்று அனைத்து டிவிகளிலும் பங்கேற்றுள்ளார். 
அது மட்டுமில்லாமல் மலையாள சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது இவரை பற்றிய விவரம்
இன்னும் காலங்கள் இருக்கிறது தன்னுடைய கலைப்பயணத்தை அவர் தொடரட்டும்.

Vedanthadesikan Mani Lion

Leave a Reply