• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தினந்தோறும் 2 லிட்டர் சிறுநீர் அருந்துங்கள் - ஏஐ பதிலால் பெரும் அதிர்ச்சி

சிறுநீரகக் கற்களை விரைவாக கரைக்க சிறுநீரை அருந்துங்கள்' என்ற கூகுள் ஏஐ இன் அறிவுரைக்கு இணையவாசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகாட்டல் முதல் உடல் உபாதைக்கான மருத்துவ ஆலோசனை வரை சகலத்துக்கும் கூகுளில் விடை தேடும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இவ்வாறான கூகுள் தேடல்களில் வினோதங்கள் மற்றும் விசித்திரங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்போது கூகுள் தேடலில் எஸ்ஜிஇ அதாவது ’சர்ச் ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அனுகூலம் கூடியிருக்கிறது.

இதன் மூலம் கூகுள் தேடல் என்பது மேலும் நுட்பமாகவும், விரிவாகவும், ஆழமாகவும் அமைவதாக கூகுள் நம்பியிருக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் ஏறுமாறான பதில்களை கூகுள் தந்ததில், தேடுவோர் மட்டுமன்றி கூகுள் நிறுவனத்தையும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.

அதற்கு எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவரின் பகிர்வு உதாரணமனது. தொல்லைதரும் சிறுநீரகக் கற்களிடம் இருந்து எப்படி விடுபடுவது என்று ஒரு பயனர் கூகுளில் தேடியபோது, ​​அவர் அதிர்ச்சிக்குரிய அந்த பரிந்துரையைப் பெற்றார்.

அதில் வழக்கமான ஆலோசனைகளுடன், நம்பவே முடியாத பரிந்துரை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதாவது, ‘சிறுநீரகக் கற்களை தினந்தோறும் குறைந்தது 2 லிட்டர் சிறுநீரை அருந்துங்கள்’ என்று பதில் கிடைத்திருந்தது.

இது கூகுள் தேடலில் மோசமான அனுபவமாக இணைய வாசிகளிடையே பேசுபொருளாகி வருகிறது. இணையத்தில் சரியான வழிகாட்டுதலை தேடுவது, பெரும்பாலும் வெற்றிகரமாக அமைவதில்லை.

அதன்படி அமெரிக்காவில் கூகுள் மேப்பை நம்பி  பாலைவனம் சென்றவர்கள் பாலைவனத்தில் சென்று மாட்டிகொண்ட சம்பவமும் அண்மையில் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply