• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விலாங்குமீன் படத்தை இயக்கிய நடிகை ஜெயதேவி காலமானார்

சினிமா

1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக நடிகை, கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டிருந்தவர் ஜெய தேவி. 1976-ம் ஆண்டு வெளிவந்த இதய மலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயதேவி. தொடர்ந்து சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், சரியான ஜோடி, ரஜினியுடன் காயத்ரி ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இதை தொடர்ந்து மற்றவை நேரில் என்ற படத்தை முதல் முதலாக 1980-ம் ஆண்டு இயக்கினார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமை வா இந்த பக்கம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். விலாங்கு மீன், விலங்கு பாசம் ஒரு வேஷம், நலம் நலமறிய ஆவல். புரட்சிக் காரன், பெண்களின் சக்தி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

பல படங்களை தயாரித்தும் உள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து உள்ளார். பிரபல இயக்குனர் வேலு பிரபாகரனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் ஜெயதேவி. பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

நடிகை ஜெய தேவி சில மாதங்களாக இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று போரூர் துரை பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி இன்றுஅதிகாலை மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை போரூரில் நடக்கிறது.

Leave a Reply