• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

கனடா

கனடாவில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் பட்டாசு வெடித்தல் தொடர்பில் கடந்த ஆண்டுகளில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இவ்வாறு தீபாவளி கொண்டாட்டத்தை மையப்படுத்தி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவது பாரபட்சமானதாக அமையும் என அதிகாரிகள் சிலர் எச்சரித்துள்ளனர்.  

கனடிய சுற்றாடல் திணைக்களத்தின் இரண்டு காலநிலை ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு எனினும் தீபாவளி கொண்டாட்டங்களின் போது காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டதனை அவதானித்துள்ளதாக சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு வெடிப்பதனால் காற்றின் தரம் மாசடைவதாக சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் நேரடியாக தீபாவளி பண்டிகையினால் இவ்வாறு காற்றின் தரம் மாசடைவதாக சுற்றாடல் திணைக்களம் அறிவிக்கவில்லை.

தீபாவளி பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு கனடிய சுற்றாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் மத்தியில் இவ்வாறு பட்டாசு வெடிப்பது பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. 

Leave a Reply