• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையை பின்போடுவதால் நீண்டகால பாதிப்புகள் ஏற்படும்! - நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கை

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பிற்போடப்படுவதால், தேசிய மற்றும் சர்வதேச பட்டதாரி பாடத்திட்டங்களுக்காக இணைத்துக்கொள்வதற்கான வயது எல்லை அப்பால் சென்றுவிட்டால், இலங்கை கல்வித்துறையில் நீண்டகால பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகுமென கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  

பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் அது தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடாகும் என்றும் கல்வி நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் கொரோனா பிரச்சினை மற்றும் பொருளாதார பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக பரீட்சைகள் பிற்போடப்பட்டமை மற்றும் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்திருந்தமை தொடர்பில் எடுத்துரைத்துள்ளனர்.

2023 உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி வரையிலும் பிற்போடப்பட்டால், அந்த வருடத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2024 மே மற்றும் மே மாதம் வரையிலும் ஒத்திவைக்கப்பட வேண்டும்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது 2024 ஜூலை மாதம் வரையிலும் தாமதமாகும். அப்போது 2024 உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பத்தாரிகள், இந்தத் தடவையைப் போல மேலதிக காலத்தை வழங்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கல்வி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் 2024 உயர்தரப் பரீட்சை மீண்டும் 2024 டிசெம்பர் அல்லது 2025 ஜனவரி மாதம் வரையிலும் பிற்போடப்படவேண்டும். இலங்கையின் கல்வியில் உள்ள பின்தங்கிய நிலையை சரிசெய்வது மேலும் தாமதமாகும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பரீட்சைகள் ஒத்திவைப்பு, பாடசாலை தவணைகள் தாமதமாகுதல், மாணவர்களை பாடசாலைக்கு சேர்த்தல் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கூடுதலாக தங்க வேண்டிய நிலை, வகுப்பறைகளில் இடப் பிரச்னையும் ஏற்படுகிறது.

உயர்தரத்துக்கான நுழைவுத் தாமதம், வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி தாமதம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் புலமைப்பரிசில் இழப்பு, அரச துறை ஆட்சேர்ப்பு தாமதம் போன்ற நீண்டகால விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாணவர்கள், 18 வயதிலேயே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும், ஆனால் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் காரணமாக அந்த வயதும் மீறப்பட்டுள்ளதாக கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply