• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சாதனை

இலங்கை

சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துள்ளது. சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.

இதற்காக மாணவர்களை பயிற்றுவித்த  பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் மற்றும்  விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம்.ஆபாக் ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பாராட்டும் நிகழ்வு நேற்று  (27) பாடசாலையில்  நடைபெற்றது.
 

Leave a Reply