• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோலாகலமாக நடைபெற்ற பிரபல இந்தி நடிகையின் திருமணம்

சினிமா

இந்தி திரையுலகில் 2011ஆம் ஆண்டில் 'Ladies vs Ricky Bahi' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பரினீதி சோப்ரா. சோப்ரா குடும்பத்தைச் சேர்ந்த இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமாக மாறினார். இந்த நிலையில் நேற்று உதய்பூரில் பரினீதி மற்றும் ராகவ் சத்தாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
 
இருவரும் தங்கள் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பரினீதி பகிர்ந்துள்ள டிவிட்டில், 'எங்கள் இதயத்திற்கு காலை உணவு மேசையில் நடந்த முதல் அரட்டையில் இருந்தே தெரிந்தது.

இந்த நாளுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இறுதியாக திரு மற்றும் திருமதியாக ஆசீர்வதிக்கப்பட்டேன்! ஒருவரையொருவர் இல்லாமல் வாழ்ந்திருக்க முடியாது. எங்களின் என்றென்றும் இப்போது தொடங்குகிறது' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் நடந்தது. இவர்களின் திருமணத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் டென்னிஸ் பிரபலமும், பரினீதி சோப்ராவின் நெருங்கிய தோழியுமான சானியா மிர்சாவும் இதில் கலந்துகொண்டார். 
 

Leave a Reply