• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF - கடனை மீளச் செலுத்துவதிலும் பிரச்சினை என்கின்றார் நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைந்தமையானது கடன் நெருக்கடிக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும் என்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் திவால் நிலையை அகற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஜனாதிபதி இன்று இறுதி செய்வார் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முன்னைய ஒப்பந்தங்களை இலங்கை மதிக்காத காரணத்தினால் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள போதும் சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply