• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகலிட கோரிக்கையாளர்களுக்கு எதிரான நடவடிக்கை - எல்லைகளை மூடும் கனடா 

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக கனடா தனது நில எல்லைகளை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கனடா இந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்தது. இந்த முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.  

ஆனால் அடுத்த 5 மாதங்களில் கனடாவில் அகதிகள் அந்தஸ்து கோரி விண்ணப்பம் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக உயர்ந்துள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் 2025ல் அரை மில்லியன் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிதாக நிரந்தர வதிவிட உரிமம் அளிக்கப்படும் என ஒருபக்கம் கனடா பெருமை பேசி வருகிறது.

மறுபுறம் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களை நிராகரிக்கவும் செய்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் வழியாக கடந்த ஆண்டு மட்டும், 39,000க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில் அமெரிக்காவை ஒப்பிடுகையில் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவளிக்கும் நாடாகவே கனடா உள்ளது. இந்த நிலையில், கனடாவும் அமெரிக்காவும் மார்ச் மாதம் தங்களின் இரண்டு தசாப்த கால புகலிடக் கோரிக்கை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்தனர்.

இந்த ஒப்பந்தம் தற்போது இரு நாடுகளின் 4,000 மைல் நில எல்லையின் ஊடாக மக்கள் நுழைவதை தடுக்கும். வெளியான தகவலின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பின்னர் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கனடாவிற்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. 

Leave a Reply