• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெலென்ஸ்கியின் ஆதரவாளரான கோடீஸ்வரர் அதிரடி கைது

உக்ரைனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆதரவாளருமான நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2015ல் Ihor Kolomoisky என்பவரின் சொத்து மதிப்பு 1.36 பில்லியன் டொலர் என பதிவு செய்யப்பட்டது.
  
தற்போது முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள 63 வயதான Ihor Kolomoisky இரண்டு மாதம் விசாரணைக் கைதியாக இருப்பார் என்றே நீதிமன்ற தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கும் முன்னர் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் ஊடாக சுமார் 13.5 மில்லியன் டொலர் தொகையை வெளிநாடுகளில் பதுக்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2013 முதல் 2020 வரையில் அவர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் சூழலில் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறி வரும் நிலையிலேயே Ihor Kolomoisky கைதாகியுள்ளார்.

கைது தொடர்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அவரது சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் 14 மில்லியன் டொலர் செலுத்தி பிணையில் வெளிவர அவர் மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, நாட்டு மக்களுக்காக அன்றாடம் வெளியிடும் காணொளி உரையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சர்ச்சைக்குரிய வழக்கைக் குறிப்பிடத் தவறவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், உக்ரைனைக் கொள்ளையடித்து, சட்டத்திற்கு மேல் தங்களைத் தாங்களே முன்னிறுத்திக் கொண்டவர்கள் வழக்கம் போல் இனி செயல்பட முடியாது என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

முன்னர், ஜனாதிபதி தேர்தலின் போது கோடீஸ்வரர் Ihor Kolomoisky-ன் கைப்பாவையாக ஜெலென்ஸ்கி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மட்டுமின்றி, Ihor Kolomoisky-ன் சொந்த தொலைக்காட்சியில் தான் ஜெலென்ஸ்கியின் ஜனாதிபதி நாடகம் ஒளிப்பரப்பானது.

ஆனால் அந்த தொழிலதிபருக்கு தமது அரசாங்கத்தில் எந்த செல்வாக்கும் இல்லை என்று ஜெலென்ஸ்கி பலமுறை மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply