• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார அமைச்சரின் நம்பிக்கையில்லா பிரேரனை குறித்து TNA வின் தீர்மானம்

இலங்கை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிப்பதா இல்லை நடுநிலை வகிப்பதா என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற குழு கூடித் தீர்மானிக்கவுள்ளது.

இதேவேளை, குறித்த பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன இவ்வாறு தெரிவித்துள்ளன.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எமது நாடாளுமன்ற குழு கூடியே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன், எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply