• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்று வானில் தோன்றவுள்ள நீல நிலவு

இலங்கை

வானில் தோன்றும் அரிய காட்சியான சூப்பர் ப்ளூ மூன் இன்று(30) நிகழ்கிறது. ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. சில வானியல் நிகழ்வுகள் காரணமாக இந்த ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படுகிறது.

அதேபோல் சூப்பர் மூன் என்றால் சந்திரன் முழு நிலவு நாளன்று முன்பை விட சற்று பெரியதாகவும், முன்பு பார்த்ததை விட சற்று பிரகாசமாகவும் தோன்றும். (பூமியை நிலவு சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதை மிகவும் சிறியதாக இருக்கும்). மேலும் ஒரு சிறப்பம்சமாக இன்று வானில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது.

இரவு சுமார் 9.30 மணியளவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றும். அந்த நேரத்தில் நிலவு உச்சத்தில் இருக்கும் மற்றும் மிகவும் பிரகாசமாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் ஓகஸ்ட் 31, 2023 அன்றும் இதைப் பார்க்கலாம். மேலும், சந்திரன் சனி கிரகத்தை நெருங்கி வருவதால் இந்த நிகழ்வு மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply