• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்றாரியோ பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

கனடா

ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்பய்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண பாடசாலைகளில் புதிய பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்படம்பர் மாதம் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய கல்வியாண்டிலிருந்து இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

உளச்சுகாதாரம் மற்றும் கணித பாடம் தொடர்பில் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒன்பதாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு மொழி தொடர்பிலான புதிய விடயங்கள் கற்பிக்கப்பட உள்ளன.

வாசிப்பு, கூட்டெழுத்து என பல்வேறு மொழி விடயங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தரம் பத்து மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் கற்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply