• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த சன் பிக்சர்ஸ்

சினிமா

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிடாத வசூல் சாதனை படைத்து வருகிறது. அதன்படி முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 375 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாம் வாரம் முடிவில் 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது.

இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை தயாரித்த நிலையில் இந்த படத்தில் நடித்த பிரபலங்களுக்கு கிட்டத்தட்ட 130 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறது. அதிலும் சிவராஜ் குமார், மோகன்லால் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் கோடிகளில் சம்பளம் வாங்கி இருந்தனர்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக ரஜினி 80 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்த படத்திற்கு 30 கோடி கூடுதலாக கொடுத்திருந்தார். ஆனால் ரஜினி கேட்ட சம்பளமே வேறு என கொளுத்திப் போட்டு இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

அதாவது சன் பிக்சர்ஸ் இடம் ஜெயிலர் படத்திற்காக ரஜினி 120 கோடி சம்பளம் கேட்டிருந்தாராம். இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் ரஜினி கேட்ட சம்பளத்தை சன் பிக்சர்ஸ் கொடுக்க மறுத்து விட்டதாம்.

மேலும் அந்தப் படத்தின் நஷ்டத்தை இதில் ஈடுகட்ட வேண்டும் என்பதற்காக ரஜினிக்கு 110 கோடி சம்பளம் கொடுத்ததாக பயில்வான் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். ஆனால் இப்போது ஜெயிலர் படத்தால் ரஜினியின் மார்க்கெட் உச்சத்தை தொட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ரஜினியின் அடுத்த படத்திற்கு 200 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு ஜெயிலர் படத்தால் தனது நிறுவனத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. மேலும் இப்போது ஏற்றத்தை சந்தித்ததால் இதன் மூலம் நிறைய படங்களை அடுத்து அடுத்து தயாரிக்க உள்ளனர். விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்புக்கள் வெளியாக இருக்கிறது. 
 

Leave a Reply