• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீண்ட கால முதலீடுகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் விசேட தகவல்

இலங்கை

உணவுப் பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்ட கால முதலீடுகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்க கூட்டத்தில் உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.

நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்ட கால முதலீடுகள் ஆகிய 4 துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் அபிவிருத்தி உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியதாக நாடாளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply