• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேர்மனி நாட்டு வீரரை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழன்

இலங்கை

ஜேர்மனி நாட்டு வீரரை வீழ்த்தி முதலிடம் பிடித்த #தமிழீழத்தின் அடுத்த தலைமுறை தமிழன்.!
“எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்”
குத்து சண்டை
தொடரும் புலம்பெயர் தமிழர்களின் வெற்றித்தடங்களில் மற்றுமொரு இளம் தலைமுறை #சதுர்த்திகன் ????????சுவிஸ்…
சுவிஸ்???????? – ஜெர்மனி???????? இடையில் 20.08.2023 அன்று ஜெர்மனி singen எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார்
தமிழீழத் தேசியக் கொடியை போர்த்தி களத்தில் தன்னை தயார் செய்தார் இப்போட்டியில் சுமார் 130 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் 17 வயதுடைய சதுர்த்திகன் நிறை அடிப்படையில் தனது எதிர் வீரரை குத்தி மடக்கி வெற்றி சூடினான். 75கிலோ நிறையுடைய சதுர்த்திகன், 79 கிலோ நிறையுடைய ஜேர்மன் வீரனை எதிர்கொண்டு தனது வெற்றியை பதித்தான்.
சதுர்த்திகன் சுவிஸ் சூரிச் emrac எனுமிடத்தில் வசித்து வரும் திரு.திருமதி சிவகாந்தன் கெளசி
தம்பதிகளின் புதல்வனாவார்.
எம் தேசத்து பிள்ளைகள் புலத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறார்கள் ஆனாலும் அவற்றையெல்லாம் கொண்டாடி தீர்க்க எமக்கான தனியரசு இல்லையே
என்கிற ஏக்கம் இருக்கதான் செய்கிறது.
வாழ்த்துக்கள் செல்லம் சதுர்த்திகன்

 

Leave a Reply