• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எயிட்ஸ் நோயாளர்களுக்கு புதிய சிகிச்சைமுறை அறிமுகம்

இலங்கை

HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க ‘ப்ரெப்’ என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவிக்கின்றது.

தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதான பத்திரன புதிய சிகிச்சை முறை குறித்து கருத்துத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தரவுகளைச் சேகரித்து சோதனை செய்கிறோம். பொதுவாக, மற்ற ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் எச்.ஐ.வி தொற்று உள்ளது.

ஆனால் 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 இல், புதிதாக 48மூ அதிகரிப்பு ஏற்பட்டது என்பதை நாம் குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பே இதற்குக் காரணம். 2021ல் கொவிட் பிரச்சினையால் பலர் எச்.ஐ.வி தொற்று பரிசோதனைகளை முன்னெடுக்கவில்லை.

கடந்த ஆண்டை விட எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை இந்த ஆண்டின் இறுதியில் கணிக்கலாம்.

2023 இன் முதல் காலாண்டில், 165 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளனர். இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலும் ஆண்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், HIV அபாயத்தில் உள்ளவர்களுக்காக ப்ரெப் எனும் புதிய சிகிச்சை முறையை ஆரம்பித்துள்ளது.

ப்ரெப் சிகிச்சையை நாடளாவிய ரீதியில் உள்ள 41 STD சிகிச்சை நிலையங்களில் பெறலாம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply