• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் சிக்கும் கள்ள நோட்டுகள்

சுவிட்சர்லாந்தில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன.

எவ்வளவு கள்ள நோட்டுக்கள் தெரியுமா?

கடந்த ஆண்டில் மட்டும், 7 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் சிக்கியுள்ளதாக பெடரல் பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத அளவில் கள்ள நோட்டுகள் நாட்டில் உலவுவது கவலைக்குரிய விடயம்தான் என்றாலும், இவ்வளவு கள்ள நோட்டுக்கள் பிடிபட்டது நல்ல விடயம்தான் என்கிறார்கள் அதிகாரிகள்.

அதிக அளவில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுக்கள் 1,000 சுவிஸ் ஃப்ராங்க் நோட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply