• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எது?

சினிமா

ஒரு பிரபல காமெடி நடிகரிடம், ‘உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எது?’ என்கிற உளுத்துப் போன கேள்வியைக் கேட்டார் நிருபர்.
அவரும் சலிக்காமல் சொல்ல ஆரம்பித்தார்:
’ஒரு சமயம் சென்னையின் பிரபலத் துணிக்கடை ஒன்றுக்குப் போக வேண்டியிருந்தது. கல்லாவில் இருந்தவர் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் வாயைப் பிளந்து, ‘சார்... நீங்களா! எங்க கடைக்கா! என் வய்ஃப் கிட்டே சொன்னா நம்பக் கூட மாட்டா. ஒரே நிமிஷம், நான் அவளுக்கு ஃபோன் பண்றேன், உங்க குரல்லே நீங்க ஏதாவது ஒரு வாக்கியம் பேசணும் அவ கிட்டே.. அப்டீன்னார். நானும் பேசினேன்.

கடைக்குள்ளே எங்கே போனாலும் என் கூடவே வந்து, அந்தப் படத்துலே இன்ன சீன் மறக்க முடியாதது, இந்தப் படத்துலே அந்த சீன் மறக்க முடியாததுன்னு சொல்லிக்கிட்டே என்னோடவே நடக்கிறார்.
நான் கொஞ்சம் என்னை மறந்து நிறைய துணி வாங்கிட்டேன். பர்ஸில அவ்வளவு கேஷ் இல்லை. செக் அக்ஸப்ட் பண்ணுவீங்களான்னு கேட்டேன்’ நிறுத்தினார் நடிகர்.
‘என்ன சொன்னார் கடைக்காரர்? ஆட்டோகிராஃபுக்காகவே செக்கை அக்ஸப்ட் பண்ணியிருப்பாரே?’ என்றார் நிருபர்.
‘அதான் இல்லை. செக் அக்ஸப்ட் பண்றேன். ஆனா ஐ. டி. புரூஃபுக்கு போட்டோ ஐடி ஏதாவது இருக்கான்னு கேட்டாரு’

 

KG Jawarlal
 

Leave a Reply