• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சத்யராஜ் ரசித்த வசந்த மாளிகை...

சினிமா

திரு. சத்யராஜிடம் படம் பார்த்தது பற்றி கேட்டபோது, "நான் மிகவும் ரசித்து பார்த்தேன். சிவாஜி என்ன அழகாக நடித்திருக்கிறார். அவரது ஸ்டைல், விதவிதமான உடைகள் எல்லாம் நான் 1972 ல் படம் வெளியான போது ரசித்ததை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன். ரசிகர்களும் காட்சிக்கு காட்சி ஆரவாரம், கைதட்டல் என்று திரையரங்கையே உற்சாக சூழ்நிலையாக்கினர். படத்தில் திருமதி. வாணிஸ்ரீ அவர்கள் நடிப்பு அபாரம். அந்த வேடத்தை அவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக செய்து விட முடியாது. அவருக்கு நான் போன் செய்து பாராட்டினேன். மிகவும் உற்சாகமாகி விட்டார். அந்த படத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

நான் "வசந்த மாளிகை"யின் தெலுங்கு (பிரேம் நகர்), இந்தியில் 'பிரேம் நகர்' படங்களும் பார்த்தேன். சிவாஜியின் நடிப்புதான் அருமை" என்று கூறினார்.

நடிகர் சத்யராஜ் அவர்கள்  சென்னை ஆல்பர்ட்  திரையரங்கில் 'வசந்த மாளிகை' கண்டு ரசித்தார்.

Ithayakkani Cinema Special

Leave a Reply