• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடசென்னைப் பகுதியை கதைக்களமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்தான், டைனோசர்ஸ்

சினிமா

படத்தின் முதல் பாதிவரை மிகப்பிரமாதமான காட்சிகளை வைத்து நமை ஆச்சர்யப்படுத்திருக்கிறார் இயக்குனர் M.R.மாதவன் .இரண்டாம் பாதியில் பழிவாங்கும் பகுதியை திரைக்கதையில் சில Brilliant ஆன Idea-க்களை புகுத்தி எடுத்திருந்தால் மிகச்சிறந்த திரைப்படமாக பேசப்பட்டிருக்கும்.
இடைவேளை நேரத்தில் முதல்பாதியைப் பற்றி வெகுஜனமக்கள் ஆச்சர்யப்பட்டு பேசியது என்காதிலும் விழுந்தது.அதே ஆர்வத்தோடு இரண்டாம் பாதியை பார்க்க ஆரம்பித்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிச்சம் ஆனது.
பணபலமும் ஆள்பலமும் படைத்த சாலையாரை சாமான்யன் ஒருத்தன் வீழ்த்த முடியுமா?அதற்கு Ideas ரொம்ப முக்கியம் இல்லையா?
உதாரணத்திற்கு அபூர்வ சகோதரர்கள் படத்தில் அதிகார பலமிக்க நான்கு பேரை அப்பு கமல் வீழ்த்துவதற்காக திரைக்கதையில் அதிகமாக மெனக்கெட்டிருப்பார்கள்.அதனால்தான் அந்தப் படம் பெரும் வெற்றிகண்டது.
இந்தப் படத்தில் சாலையாருடன் மண்ணு(Hero)சண்டை போடுவதைப் பார்க்கும் பொழுது சிரிப்புதான் வந்தது.யானையோடு பூனை சண்டை போடுவது போல் இருந்தது.
டைனோசர்ஸ்-Spoiler alert:வடசென்னையில் மிகப்பெரும் தாதா சாலையார்.அவனுடைய நேர் எதிரி கிளியப்பன்.இவர்கள் இருவருக்கும் எப்பொழுதுமே War-தான்.
சாலையார் கிளியப்பனின் மச்சினனை (தங்கையின் கணவன்)தனது அடியாட்கள் 10 பேரை வைத்து போட்டுத்தள்ளுகிறான்.அந்த பத்துப் பேரில் ஒருவன்தான் துரை.இவனுக்கு கல்யாணம் ஆகி ஓரிரு நாள்தான் ஆகுது.அதனால்,சரண்டர் ஆக மறுக்கிறான்.இந்த தொழிலை விட்டு விடவும் முடிவு செய்கிறான்.
இவனுடைய நெருங்கிய நண்பர்கள்தான் மண்ணு,தனா.இவர்கள் இருவரும் சகோதரர்கள்.தனா,அண்ணன்.
மண்ணு(Hero),தம்பி.
தன்னுடைய நண்பனுக்காக சரண்டர் ஆகிறான் தனா.இது இவர்களுடைய அம்மாவுக்கு பிடிக்கவில்லை.தனது கணவன்தான் அடிதடி தொழிலுக்கு போய் அல்பஆயுசுலேயே உயிரை விட்டான்.தனது மகன்களாவது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த தொழிலுக்கே போகாமல் பார்த்துக்கொள்கிறாள்.அண்ணன் டெய்லரிங் தொழில் செய்கிறான்.தம்பி,வேலை தேடிக்கொண்டிருக்கிறான்.
இந்த சூழ்நிலையில்தான் அண்ணன் தனா நண்பன் துரைக்காக சிறைக்கு செல்கிறான்.
தனது தங்கையை கொன்றவர்களில் ஒருவன் வெளியில் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டு அவனை Sketch போட்டு கொலை செய்கிறான் கிளியப்பன்.இந்தப் பகுதி வரை மிகப்பிரமாதமாக படமாக்கியுள்ளார்கள்.Ideas எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.நடித்தவர்களின் நடிப்பும் சிறப்புதான்.சென்னை வட்டார பாஷையை மிகசிறப்பாகவே பேசியிருந்தார்கள்.
மண்ணு(Hero)எடுக்கும் Revenge போர்ஷன் மட்டும் 1-st half மாதிரி இருந்திருந்தால் சிறப்பான Action படம் வரிசையில் இந்தப் படமும் சேர்ந்திருக்கும்.
புதியதொரு தயாரிப்பு நிறுவனத்தில் எல்லோரையுமே புதுமுகங்களாக போட்டு எடுத்ததும் நல்லதொரு பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.இதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்தான் இந்தப் படத்தில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சாலையார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மானக்சா ஒரு still photographer.அவரை நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார் மானக்சா.
இவருடைய உயரமும்,கருப்பு நிறமும் இவருக்கான +++ தான்.வாய்ப்புகள் தொடரலாம்.வாழ்த்துகள்.
விஜய் நடித்த திருமலை திரைப்படத்தின் இயக்குனர் ரமணாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நிஜத்திலேயே இவர் தன்னம்பிக்கை மிகுந்த நடிகர்தான்.
சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு தொண்டையில் புற்று நோய்வந்து ஆபரேஷன் செய்து கொண்டார்.வலிமையாக பேசும் சக்தியை இழந்தார்.வசீகரமாக பேசும் ஆற்றல் படைத்த இவருக்கு இப்படியொரு நிலை வந்ததே பெரும் துயரம்தான்.
திருமலை படத்தில் விஜயின் Body language-ம்,Diologue delivery-ம் அப்படியே இவருடையதுதான்.விஜய்க்கு நல்லதொரு Break கொடுத்த திரைப்படமிது.
இன்றைய நிலையில் கழுத்துப்பகுதியில் கருவி ஒன்றை பொருத்தியிருக்கிறார்கள்.பேசும் பொழுது அதை அழுத்தினால்தான் அவருடைய பேச்சு நமக்கு கேட்கும்.அவருடைய அந்த நிலையை அப்படியே கொண்டு வந்துள்ளார் இயக்குனர் M.R.மாதவன்.அவரை திரையில் இப்படி கொண்டு வந்ததற்கே இயக்குனரை மனதாரப் பாராட்டலாம்.இவருக்கும் வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரலாம்.
படத்தில் love episodes இல்லாமல் இருந்திருந்தால் கதைக்கும் எவ்வித பாதிப்பும் வந்திருக்காது.படத்தின் நீளமும் குறைந்திருக்கும்.
சில பல குறைகள் இருந்தாலும்,இந்தப் படத்தின் மூலம் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பும் உறுதியாக கிடைக்கும் என நம்புகிறேன்.

 

சே மணிசேகரன்
5.08.2023

Leave a Reply