• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு படத்துக்கு பெயர் வைப்பது அவ்வளவு எளிமையான விடயம் அல்ல

சினிமா

ஒரு படத்துக்கு பெயர் வைப்பது அவ்வளவு எளிமையான விடயம் அல்ல .படத்தின் பெயர் தான் அந்த படத்திற்கான முகவரி.
படத்தின் பெயர் நேர்மறையாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பர்.அதே போல் படத்தின் பெயர்களிலும் சில நம்பிக்கைகள்,சென்டிமென்ட்ஸ் சிலருக்கு உண்டு.
உதாரணமாக,ஷங்கர்,தான் இயக்கும் படங்களுக்கு பெரும்பாலும் அவர் "ன் " என்ற எழுத்தில் முடியும் படி படப்பெயர்களை வைப்பதுண்டு.
ஜென்டில்மேன் ,காதலன்,இந்தியன்,முதல்வன்,அந்நியன்,எந்திரன்,
நண்பன் …
கதை :
படத்தின் பெயரை விட ,படத்தின் கதை மிக முக்கியம். ரசிகர்களுக்கு அடுத்தது என்ன என்ன ?? என்று யோசிக்க வைக்கும் படி கதை இருக்க வேண்டும் .ஆங்காங்கே திருப்புமுனைகள் இருக்க வேண்டும் ,திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றே அனைத்து இயக்குனர்களும் நினைப்பர்.
ஆனால் இந்த இயக்குனர் சற்று மாறுபட்டவர்.இவர் இந்த படம் இயக்குவதற்கு முன்பு இவர் இயக்கிய முதல் மூன்று படங்களுமே சற்று வித்யாசமானகதை அம்சம் உள்ள படங்கள் தான்.
யாருப்பா அந்த இயக்குனர் ??
S.J.சூர்யா !!!
வாலி,குஷி ,நியூ படங்கள் இயக்கிய பிறகு நான்காவது படத்திற்கு "B.F" என்று பெயர் வைத்தார். "B.F" என்றால் Best Friend என்ற அர்த்தத்திலேயே அவர் அந்த பெயரை வைத்தார் .
ஆனால் இந்தியாவில் பொதுவாக B.F என்றால் Blue Film அதாவது ஆபாச படம் என்ற பொருள் உண்டு
இதனால் சில அரசியல் கட்சிகள் ,படத்தின் பெயரை மாற்றும் படி போராட்டம் செய்தது.
உடனே S.J.சூர்யா,படத்திற்கான பெயரை ரசிகர்களே வைக்க வேண்டும் என்ன எண்ணத்தில் ஒரு போட்டி நடத்தி,அதன் மூலம் படத்தின் பெயரை வைத்தார்.
படத்தின் பெயர் தமிழில் முதல் இரண்டு எழுத்துக்களான "அ .. ஆ"…
அதாவது அன்பே ஆருயிரே.
ஆக உலக சினிமா வரலாற்றில் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு மக்களே பெயர் சூட்டிய படம் இதுவே.
அடுத்து படத்தின் கதை,
மேலே கூறியது போல் ,ஒரு படத்திற்கு ,கதை தான் உயிர் நாடி,அதை எந்தளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் படத்தை இயக்குவதால் மட்டுமே படம் வெற்றி பெரும்.
S.J.சூர்யா,இதையும் வித்தியசமாக கையாண்டார்.
படத்தின் முதல் காட்சிலேயே,இரண்டு நிமிடங்களுக்கு படத்தின் கதை என்ன,படத்தின் முதல் பாதி என்ன கதை,இரண்டாம் பாதி என்ன கதை என்ன, படத்தில் கதாநாயகன்,கதாநாயகிக்கு முதல் பாதியில் எத்தனை வேடங்கள்,இரண்டாம் பாதியில் எத்தனை வேடங்கள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக படம் பார்க்க வந்த ஆடியன்ஸுக்கு கூறிவிடுவார்.
அவர் சொன்ன கதை :
பிரிந்த காதலர்களை அவர்களின் நினைவுகளே சேர்ந்து வைப்பது தான் இந்த படத்தின் கதை.உலகத்திலேயே முதல் முறையாக நினைவுகளுக்கு உடல் கொடுத்து,உயிர் கொடுத்து,உடை கொடுத்து,உருவம் கொடுத்து திரையில் உலவ விட போகிறேன்.
முதல் பாதியில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி சிங்கள் ஆக்ட்,இரண்டாம் பாதியில் கதாநாயகனும் கதாநாயகியும் டபுள் ஆக்ட்.
அதாவது நிஜ கதாநாயகன் ,நினைவு கதாநாயகன் ,நிஜ கதாநாயகி,நினைவு கதாநாயகி.இப்படி நாலு பேர்.
இந்த நிஜத்தையும் ,நினைவுகளையும் எப்படி வித்தியாசப்படுத்தி பார்த்து கொள்வது,அப்படிங்கற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
ரொம்ப சிம்பிள்ங்க ,நார்மல் கலர்ல டிரஸ் போட்டவங்கள்லாம் நிஜங்கள்,இடைவேளைக்கு பிறகு ப்ளூ கலர்ல டிரஸ் போட்டுட்டு வரவங்களாம் நினைவுகள்.அதாவது ப்ளூ கலர்ல பேண்ட்ஷர்ட் ,ப்ளூ கலர்ல வேஷ்டி ஷர்ட் ,saree இப்படி எல்லாம்..யாரெல்லாம் ப்ளூ கலர்ல வந்தாலும் அவங்கெல்லாம் நினைவுகள்.

இப்படி ப்ளூ நினைவுகளெல்லாம் சேர்ந்து ,அந்த காதலர்கள சேர்த்து வைக்குது.
இப்படி பட்ட வித்தியாசமான முயற்சிகள் நான் எடுக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா ? இதுவரை நான் எடுத்த வித்தியசமான படங்களுக்கு நீங்கள் கொடுத்த தொடர் வெற்றி தான் ,உங்கமேல வச்ச அந்த நம்பிக்கை தான் ,அப்போ ஆரம்பிக்கலாமா ??
என படத்தின் கதையை படத்தின் முதல் காட்சிலேயே தெளிவாக கூறிய பின்பு தான் படமே ஆரம்பிக்கும்.
இந்த மாதிரி ஒரு துணிச்சல் எந்த இயக்குனருக்கும் அவ்வளவு எளிதில் வராது. இந்த படமும் பல விமர்சனங்களுக்கு நடுவில் வியாபார ரீதியில் கமர்ஷியல் வெற்றி பெற்றது.
நன்றி !!

 

Prashantha Kumar
 

Leave a Reply