• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பேன் – சாணக்கியன் எச்சரிக்கை

இலங்கை

பிரதமரின் கூட்டத்தில் அதிதிகள் கதிரையை தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புறக்கணித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், அரச ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அதிதிகளுக்கான கதிரையை புறக்கணித்து, மக்களோடு மக்களாக அமர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இந்த நிலையில் கிழக்கில் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டுக்கொள்ளாது நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச ஊழியர்களும் உதாசீனப்படுத்தம் வகையில் நடந்துக்கொள்கின்றனர். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாகவே பிரதமரின் கூட்டத்தில் அதிதிகள் கதிரையை புறக்கணித்து, மக்களோடு மக்களாக அமர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்டேன் என தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் தொடர்பான ஆவணமொன்றினையும் பிரதரிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஊழல் தொடர்பான குற்றங்களுக்காக விசாரணை குழுவொன்றினை அமைப்பதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் மக்களுக்கு எதிராக செயல்படும் ஊழல் குற்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்காபடாவிட்டால் கிழக்கு மாகாணத்தில் முக்கிய அரச தலைவர்கள் விஜயம் மேற்கொள்ளும் போது, மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பேன் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply