ஈரான் ஒப்பந்தத்தை சீர்குலைக்க விடமாட்டேன் - டிரம்ப் உறுதி
லெபனான் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எவ்வாறு கையாள்வது என்பது தனக்குத் தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்காமல் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அதிபர் டிரம்ப், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்தப் போவதில்லை என குறிப்பிட்டார்.
எனினும், குறித்த விவகாரம் தீர்க்கப்படும் என்றும், தாம் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் திறமையானவர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான பிரச்சினைகள் உட்பட பல்வேறு சிக்கல்களை மிக விரைவாகத் தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டார்.
அமெரிக்கா - ஈரான் உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்பின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
























