பதுளை மகளிர் பாடசாலையில் திடீர் வெடிப்பு - மாணவிகள், ஆசிரியர் மருத்துவமனையில்
இலங்கை
பதுளை நகரில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இன்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில், 04 மாணவிகளும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில், காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்தப் பாடசாலையின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்று இரசாயனப் பொருட்கள் தொடர்பான பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, இரசாயனப் பொருட்களை அளவிட பயன்படுத்தப்பட்ட ஒரு பீக்கர் பரிசோதைக்குழாய் வெடித்ததன் காரணமாக, அவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






















