தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் முதன்முறையாக யாழ். மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை
இலங்கை
தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை தேசிய அணி சார்பாக விளையாடிய யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தெற்காசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வட மாகாண பாடசாலை மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதிய இலங்கை அணி, இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளது.
தேசிய அணிக்குத் தெரிவாகி சாதனை படைத்த மாணவி லூட்சி றெஜினஸின் பயிற்சியாளராக தனுஷ் ராஜசோபனா செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















