2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்
இலங்கை
இலங்கைக்கு நாளை (10) மற்றும் மறுநாள் (11) மேலும் இரண்டு எரிபொருள் சரக்குகளை தாங்கிய கப்பல்கள் வரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
7,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் 29,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெட்ரோலை சுமந்து வரும் கப்பல் நாளை (10) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றாலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலிருந்து 28,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி வரும் மற்றொரு கப்பல் வியாழக்கிழமை (11) அன்று வந்து சேரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
























