• Welcome to TamilsGuide
செய்திகள் 1

12 நாள் முடிவில் நடிகர் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்... 

சினிமா

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கடந்த மே 28ம் தேதி வெளியான திரைப்படம் பிளாஸ்ட்.

அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு மக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல் விமர்சனங்கள் அமோகமாக வர அடுத்தடுத்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்த வருடத்தின் வெற்றிப் படங்களின் லிஸ்டில் அமைந்துள்ளது.

12 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 60 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. வரும் நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல கலெக்ஷன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply