சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
இலங்கை
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் 18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்டாச் சுற்றுப்போட்டியில் யாழ் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகியுள்ளது.
குருணாகல் மலியதேவ பெண்கள் மகளிர் கல்லூரியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட மகாஜனக் கல்லூரி 2;0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தேசியமட்ட சாம்பியனாகியுள்ளது
இப்போட்டி நேற்றையதினம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலப் பரிட்சையை மேற்கொண்டன முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் எவையும் போடவில்லை இரண்டாம் பாதியில் மகாஜனா கல்லூரி பெண்கள் அணி இரண்டு கோல்களை போட்டு இந்த உதைபந்தாட்ட தொடரின் சம்பியன் ஆகியது
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாம் பாதியில் மகாஜனா கல்லூரி வீராங்கனை, கல்கிசா முதல் கோலை போட்டு அணியை உற்சாகப்படுத்தினர் அடுத்த கோலை அணி வீராங்கனை ஆன்ரிவிஸ்சனா போட்டார்
ஏற்கனவே நடைபெற்ற இந்த போட்டியில் பொலநறுவை றோயல் கல்லூரிக்கு எதிரான போட்டியில் . கல்கிசா மூன்று கட்ரிக் கோல்களை போட்டு அரையிறுதிப் போட்டியில் சாதித்து அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேறச் செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக மகாஜன கல்லூரியை சேர்ந்த ஆன்ரிவிஸ்சனாவும் சிறந்த கோல்காப்பாளராக மகாஜனாகல்லூரியை சேர்ந்த சாளினியும் தெரிவுசெய்யப்பட்டனர்.























