• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கை

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி மற்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட கூடிய பகுதியாக இது உள்ளது.

எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
 

Leave a Reply