• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓணம் ரிலீஸுக்கு வரிசைகட்டிய மலையாள படங்கள்

சினிமா

கேரளாவின் அறுவடை பண்டிகையான ஓணம் இந்தாண்டு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 26 வரை கொணடாடப்பட உள்ளது.

10 நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது கேரளாவே விழாக்கோலமாக காட்சியளிக்கும்.

ஓணம் விடுமுறையை ஒட்டி பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி நடிகர்கள் துல்கர், பிருத்விராஜ், நிவின் பாலி ஆகியோரின் படங்கள் ஆகஸ்ட் 20 அன்று ரிலீஸ் ஆகின்றன.

'டர்போ' இயக்குநர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'கலிஃபா',

'பிரேமலு' இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' மற்றும்

இயக்குநர் நஹாஸ் ஹிதயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த 'ஐயம் கேம் படம்' படம் ஆகியவை ஓணம் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Reply