பிரபல மலையாள நடிகர் சலீம்குமார் காலமானார்
சினிமா
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஜூன்.6) காலமானார்.
தனது அபாரமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சலீம்குமார். மலையாளத் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
ஆதாமின்டே மகன் அபு படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் , அத்துடன் பல்வேறு பிரிவுகளில் பல கேரள மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர்.
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.





















