• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலைவர் 173 படத்தில் நடிக்கும் பிரபல இயக்குநர்

சினிமா

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளனர். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்திற்காக இயக்குநர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. இதையடுத்து இப்படத்தை டான் புகழ் சிபி.சக்கரவர்த்தி இயக்கப்போவதாக கூறப்பட்டது. அவரும் இந்த படத்தை விட்டு விலகினார்.

இதனை தொடர்ந்து, ‘டிராகன்’ மற்றும் ‘ஓ மை கடவுளே’ படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ‘தலைவர் 173’ படத்தை இயக்குவார் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தலைவர் 173’ படத்தில் பிரபல இயக்குநர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த தகவல் உண்மையானால், 'தலைவர் 173' திரைப்படம், ரஜினிகாந்துடன் மிஸ்கின் இணையும் முதல் படமாகவும், 'டிராகன்' படத்திற்குப் பிறகு அஸ்வத்துடன் அவர் இணையும் இரண்டாவது படமாகவும் அமையும்.

Leave a Reply