கனடாவில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அரசு முடிவு
கனடா
ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது.
கனடாவில் குறைந்தபட்ச ஊதியத்தை 18.15 டொலர்களாக அதிகரிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் அரசு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த முடிவு செய்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் பணியாளர்கள் இந்த ஊதிய உயர்வைப் பெற இருக்கிறார்கள்.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு இடத்துக்கு இடம் மாறுபடும்.
அதிகபட்சமாக Nunavutஇல் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, 19.75 டொலர்களாகவும், குறைந்தபட்சமாக ஆல்பர்ட்டாவில் 15 டொலர்களாகவும் இருக்கும்.
சராசரியாகக் கூறினால், ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் தற்போது 17.75 டொலர்களாக உள்ளது, ஏப்ரல் 1 முதல் 18.15 டொலர்களாக உயர உள்ளது. அதாவது, சராசரியாக 0.40 டொலர்கள் உயர உள்ளது.






















