• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரிலீஸுக்கு முன் சூர்யாவின் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. 

சினிமா

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி வில்லனாகவும் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார்.

மேலும் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், அனகா மாயா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கருப்பு திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் ப்ரீ பிஸினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருப்பு திரைப்படம் இதுவரை நடந்த ப்ரீ பிஸினஸில் மட்டுமே ரூ. 110 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதில் திரையரங்க உரிமை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Non theatrical உரிமைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொகை வந்துள்ளது. கருப்பு திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 130 கோடி. இதில் தற்போது 90% சதவீதம் ப்ரீ பிசினஸ் மூலமாக தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கருப்பு திரைப்படம்தான் சூர்யாவின் கம்பேக் படமாக அமையும் என உறுதியாக கூறப்படுகிறது. 
 

Leave a Reply