நடிப்பு, கார் பந்தயத்தை தொடர்ந்து புதிய அவதாரம் எடுக்கும் அஜித்
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ள அஜித்குமார் தற்போது தொடர் கார் பந்தயங்களில் பிசியாக இருக்கிறார்.
'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையில் நடிகர் தாண்டி அஜித்குமார் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆம், இனி தயாரிப்பாளராகவும் அஜித்குமார் மாறவுள்ளார்.
அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி. என்ற பெயரில் அவர் புதிய நிறுவனத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சேம்பர்) பதிவு செய்திருக்கிறார். மேலும் ரூ.2.56 லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
அஜித்குமாரின் இந்த புதிய முடிவு அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. அதேவேளை தயாரிப்பாளராகிவிட்டால் இனி படங்கள் நடிப்பாரா, மாட்டாரா? என்ற கேள்வியையும் எழச் செய்துள்ளது.
அஜித்குமாரின் சமீபகால போக்கு புரியாத புதிராகவே இருப்பதாக திரையுலகினரும், ரசிகர்களும் பேசிக் கொள்கிறார்கள்.






















