• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மரத்தில் கபே அமைத்த ஹரீஷ் உத்தமன்

சினிமா

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருப்பவர் ஹரீஷ் உத்தமன். கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஹரீஷ் உத்தமன் ஒரு மரத்தின் உச்சியில் அழகான ‘கபே’ அமைத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘2008-ம் ஆண்டில் இருந்தே கபே அல்லது உணவகத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற ஆசையை சுமந்து வந்தேன். புதுச்சேரி அருகே மரத்தின் மேல் ‘கபே’ உருவாக்கி உள்ளேன். இந்த கபேவில் மரங்களுக்கு மத்தியில் அமர்ந்து பசுமையை சுவாசித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply