மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - இருவர் கைது
இலங்கை
மட்டக்களப்பு, மண்முனை பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தீவுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இன்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லி லீட்டர் கசிப்பு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கைதானவர்கள் தாளங்குடா, மாவிலங்கத்துறை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






















