TamilsGuide

ஒரு வார போரினால் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு 

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போரினால், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.

இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லெபனான் அரசு குறிப்பிட்டுள்ள 5,17,000 என்ற எண்ணிக்கை, அரசின் இணையதளத்தில் பதிவு செய்தவர்களை மட்டுமே குறிக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனான் அரசு, தெற்கு மற்றும் கிழக்கு லெபனானின் பெரும் பகுதிகளில் இருந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ள ஏராளமான மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்கள் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் முழுவதையும் விட்டு வௌியேறுமாறு கடந்த வாரத்தில் இருந்து இஸ்ரேல் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment