• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் கவனமாக ஜாக்கிரதையாக இருப்பதால் பயமின்றி இருக்கிறார் !

சினிமா

" நடிக்கும் போது தன் வரையில் நன்றாகச் செய்துவிட்டுப் போய் விடுவோம் என்று நினைக்கவே மாட்டார். தனது வேடத்தை மட்டுமல்ல அருகில் நடிப்பவர் கேரக்டரும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புவார். பெரிய ஆர்ட்டிஸ்ட் சின்ன ஆர்ட்டிஸ்ட் என்று வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் சொல்லித் தருவார்.அகம்பாவம் என்பதே இல்லாமல் எப்போதும் அடக்கமாக இருப்பார். அதனால்தான் எல்லோரிடமும் அவரால் அன்புடனும் பண்புடனும் பழக முடிந்தது.

ரொம்ப மரியாதையாக கவுரமாக நடந்து கொள்ளக் கூடியவர். இன்னொருவர் கஷ்டம் காண சகிக்க மாட்டார். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தெரியாமல் அனைவருடனும் பற்றோடு இருப்பவர்.

இப்போதும் எங்கேயுமாவது சந்திக்க நேர்ந்தால் கூட, 'அம்மா, சவுக்கியமா? ' என்று பரிவோடு கேட்பார். அப்போது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறார். பல வெற்றிகளை சந்தித்து..பெரும் புகழ் பெற்று.பெரிய பதவிக்கு வந்த பிறகும் அப்படியே இருப்பது அவருக்குள்ள தனிச்சிறப்பு. இதுபோல எல்லோரும் இருக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர் கவனமாக ஜாக்கிரதையாக இருப்பதால் பயமின்றி இருக்கிறார் ! "

- மக்கள் திலகம் பற்றி பானுமதி .
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.07.82 இதழ்)

Leave a Reply