• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply