சீனாவில் சோகம் - ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலி
சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






















