பராசக்தி டைட்டில் யாருக்கு சொந்தம்? - விஜய் ஆண்டனி விளக்கம்
சினிமா
மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. ஒரு விறுவிறுப்பான இன்வஸ்டிகேஷன் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது.
இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் டைட்டில் பிரச்சனை தெரியாமல் நடந்தது. அவர்களுக்கு நான் அந்த டைட்டிலை வைத்திருந்தது தெரியாது; தயாரிப்பாளரின் நிலையை உணர்ந்து அன்பின் காரணமாக 'பராசக்தி" டைட்டிலை விட்டுக் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.
விஜய் ஆண்டனி நடித்து வரும் சக்தி திருமகன் படத்தின் தெலுங்கில் பதிப்பிற்கு பராசக்தி' என்று பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.





















