• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் அபேஸ் - கண்ணப்பா படத்திற்கு வந்த சோதனை

சினிமா

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது , சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் திருடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டூடியோஸ்- இல் இருந்து ஹார்ட் டிரைவை கொரியர் மூலமாக ஃபோர் பிரேம்ஸ் ஸ்டூடியோவிற்கு கொரியர் அனுப்பி வைத்துள்ளனர். அந்த கொரியரை வாங்கியது ரகு. ஆனால் ரகு அந்த பார்சலை சரிதா என்ற பெண்ணிடம் கொடுத்தாக கூறுகிறார். தற்பொழுது அந்த இரண்டு நபர்களும் காணவில்லை. இதனால் படக்குழு ஐதரபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது யாரோ வேண்டும் என்றே படத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்தது போல் இருக்கிறது என புகாரளித்துள்ளனர். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போலீசார் தீவிர விசாரணையில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply