• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மறைந்த மலானி பொன்சேகாவின் உடல்

இலங்கை


இலங்கை சினிமாவின் ராணியான மறைந்த மலானி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (25) சற்றுமுன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று (25) முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் உடல் வைக்கப்படுவதுடன், நாளை சுதந்திர சதுக்கத்திலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக நோய் நிலையால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(24)  அதிகாலை காலமானார்.

இந்நிலையில் , மலானி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு நாளை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply