• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண் நீதிபதிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி

இலங்கை

பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிலாபத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சட்டத்தரணி, மேல் நீதிமன்ற நீதிபதிக்கு பாலியன் ரீதியான சங்கடமாகக் கருதப்படும் செய்திகளை குறுஞ்செய்தி மூலம் அனுப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 62 வயதான சட்டத்தரணி நேற்று (மே 21) கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

சட்டத்தரணி சமூக ஊடகங்கள் மூலமாகவும் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு பல்வேறு வகையான செய்திகளை அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.

மேல் நீதிமன்ற நீதிபதியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
 

Leave a Reply