தீபிகாவுக்கு டாட்டா காட்டிய அனிமல் இயக்குநர்.. ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு புது ஜோடி
'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் 'ஸ்பிரிட்'. மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருக்கிறார். நடிகை தீபிகா படுகோனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் தான் குழந்தை பிறந்தது. அதனால் தற்போது படப்பிடிப்பிற்கு வருவதற்கு பல கண்டிஷன்களை அவர் போட்டுள்ளார். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவேன் என்றும் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நீடித்தால், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிற்கும் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இது பட இயக்குனருக்கும், குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து, 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோனை நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.
தீபிகாவின் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாகவும், பிரபாஸின் காயம் மற்றும் பிற பட வேலைகள் காரணமாகவும் படம் ஏற்கனவே பல தாமதங்களைச் சந்தித்துள்ளது. இதனிடையே கதாநாயகியை தேடி வருவதால் 'ஸ்பிரிட்' திரைக்கு வர தாமதம் ஏற்படும் என்றும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.






















