• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி

இலங்கை

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி(30). பள்ளியில் படிக்கும்போது அவரது நிறத்தை வைத்துக் கிண்டல் செய்யும் வகையில் வேடன் என நண்பர்கள் அழைத்துள்ளனர்.
மலையாள ராப் பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த ஹிரண்தாஸ் முரளி தனது பெயரை ராப்பர் வேடன் என வைத்துக்கொண்டார்.
வேடன் தனது நண்பர்களுடன் ஒரு அறையில் இருக்கும் போது போலீஸார் சோதனை நடத்தி அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்ததுடன் வேடனைக் கைதுசெய்தனர். உண்மை சம்பவம் .
விசாரணை நடத்தியபோது அவரது கழுத்தில் புலிப்பல் டாலர் மாலை கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.
அது வேட்டையாடப்பட்ட புலியின் பல்லாக இருக்கலாம் எனக்கருதிய வனத்துறையினர் அவரைக் கைது செய்து பெரும்பாவூர் ஜுடிசியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது வேடன் சார்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 'வேடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுவார். ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே ஜாமின் வழங்கக்கூடாது' என வனத்துறை சார்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
'அந்த டாலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஞ்சித் என்ற ரசிகர் பரிசாக வழங்கியது. அது உண்மையான புலிப்பல் எனத் தெரிந்திருந்தால் நான் பயன்படுத்தியிருக்க மாட்டேன்.
சாதாரண மனிதருக்கு அது உண்மையான புலிப்பல் என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்.
பரிசாகக் கொடுத்தவரை அடையாளம் காட்டுவதற்கு நான் போலீசுடன் ஒத்துழைப்பேன்' என்று வேடன் தெரிவித்தார்.
இதனால்
'ஒவ்வொரு வியாழக்கிழமையும் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும். கேரளாவை விட்டு வெளியே செல்லக்கூடாது.
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வேடனுக்கு ஜாமின் வழங்கியது. கோர்ட்.
ராப்பர் வேடனின் கழுத்தில் கிடந்த புலிப்பல் டாலரின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய விஞ்ஞான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட து.
முன்பு நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவில்லை.
பட்டியலின இளைஞர் என்பதால் வேடனை வேண்டும் என்றே வேட்டையாடுகிறார்கள் எனச் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்தது.
இதை அடுத்து அரசியல் கட்சியினர் சிலர் வேடனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
தலித் மக்கள் இந்தியாவில் சாதிய படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் பட்டியலின மக்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு.
இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே வட இந்தியாவில் அழைத்து வந்தனர்.
தலித் என்பது வட இந்தியர்கள் பாவிக்கும் சொல்

தமிழர்நாட்டில் பட்டியலின ஜாதிகளை தமிழ் அரசு ஆணைப்படி ஆதிதிராவிடர் என்றும், அதற்கானத்துறையை ஆதி திராவிடர் நலத்துறை என்றும் இன்றுவரை வழங்கப்பட்டுவருகிறது. ஜாதி சான்றிதழ்களிலும் அப்படியே குறிப்பிடப்படுகிறது. பட்டியலினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது திராவிட அரசியலை மையப்படுத்துவதாக ஜாதிய அமைப்புகள், சங்கங்கள் கருதியதால் இந்த வடமொழிப் பெயரை ஒரு சில ஜாதிய அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடர்கள் என்ற பெயரின்தார்ப்பரியம் உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்
ஒடுக்குமுறை, சாதியம், மதம், ஆண்டைகள் & அடிமைகள், நிலம் & கூலி ஆகியவைற்றைக் கடுமையாகச் சாடும் காத்திரமான வரிகளைக் கொண்டு இவர் வெளியிட்ட பாடல்கள் உடனடிப் புகழ்பெற்றன.
“மகிழ்ச்சியுடன் வாழ உரிமை உண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நினைப்பவர்களுக்கும், எப்போதும் விளிம்பு நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுகிறது” என்ற அறிமுகத்தோடு வெளியான ‘Voice of the Voiceless' என்ற பாடலின் மூலம் கேரளத்துக்கு வெளியேயும் கவனம் பெற்றார் வேடன்; அன்றாட வாழ்வின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அறைகூவலாக அமைந்த ‘வா’ என்ற பாடல், இவர் மீதான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் மேலும் அதிகப்படுத்தியது.
பாலியல் குற்றசாட்டுக்கள் போதைப் பாவனை போன்ற குற்றச் சாட்டுக்கள் இவரின் மீது உண்டு
“இதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்; உங்கள் எல்லா விமர்சனங்களையும் நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். நேர்மையுடனும், எந்தப் பாசாங்கும் இன்றி என்னுடைய ஆழ்ந்த மன்னிப்பை உரித்தாக்குகிறேன். என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ளும் விதமாக அதிகபட்ச பொறுப்புணர்வுடன் இதைப் பதிவிடுகிறேன்” என்று வேடன் அந்தக் குறிப்பில் கூறியிருக்கிறார்.
மேலும், “என்னுடைய குணத்தில் கவலைகொள்ளத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டியதன் தீவிரத்தை இப்போதுதான் உணர்கிறேன். வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட சில நிகழ்வுகள், என்னுடைய இந்த நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். இப்பிரச்னையைக் களைவதற்கு உதவியை நாடப் போகிறேன், தேவையென்றால் சிகிச்சையும் எடுத்துக் கொள்வேன்” என்றும் அதில் விளக்கமளித்துள்ளார்.
(மைக்கல் ஜாக்சன் கூட இப்படியான சிக்கலில் மாட்டியது உண்டு )
“பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் எல்லா துறைகளிலும் நடக்கின்றன. ஆனால், கலைஞர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது, கலை வேறு கலைஞன் வேறு என்ற பேச்சு எழுகிறது;
கலைஞன் சமூக நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பதால் இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும், எழுதும் ஒரு எழுத்தாளர், ‘அப்படியெல்லாம் இருந்தாலும் அவர் நன்றாக எழுதுகிறார்’ என்பார்கள்
கேரளா திருச்சூர்..*வேடன்".ராப்பர்
கேரளத்தை கலக்கும் தமிழன்
தாய் யாழ்ப்பாண தமிழச்சி
தந்தை கேரளா ராப் இசையில் (rapper) கேரளத்தில் புரட்சி செய்யும் ஈழத்தமிழ் வாரிசு!
போர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் நீலகிரியில் தஞ்சமடைந்து பின், கேரளாவில் வாழ்க்கையினை தொடர்ந்த ஒரு ஈழத் தாயின் வாரிசு வேடன்!
தன் தாயினதும் அவள் தேசத்தினதும் வலியினை கேட்டுவளர்ந்த இவன் அதனை ராப் இசையாக பாடி மலையாளத்தில் மிகப் பிரபல்யமாகி வருகின்றான்!
கேரள மாநிலம் திருச்சூரில் பள்ளியில் படிக்கும்போது இவனது நிறத்தை வைத்து நண்பர்கள் "வேடன்" என்று அழைத்ததால்,
தனது மேடைப் பெயரை "ராப்பர் வேடன்" என்று மாற்றிக் கொண்டான்
சொற்களை இராகத்துடன் கோவையாக விரைவாக தொடராகப் பாடுவதை ராப் இசை எனலாம். ராப் இசை வடிவம் அமெரிக்காவில் 1970 களில் கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாகத் துவங்கி உலக பொதுப் பாட்டின் ஒர் உறுப்பாகிவிட்டது. அமெரிக்க கறுப்பின மக்களின் பண்பாட்டு சூழமைவில் தோன்றியதால், ராப் இசை வடிவமும் அதன் பிரதிகளும் அந்த மக்களின் பின்புலத்தையும் உள்வாங்கியே பிரதிபலிக்கின்றன. தமிழ் ராப் இசை அமெரிக்க ராப் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம். தமிழில் ராப் இசையை சொல்லிசை என்றும் குறிப்பிடுவர். தமிழில் அடுக்குமொழித் தொடர்கள் ராப் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
கலிங்கத்துப் பரணியை பார்ப்போமானால் அது தான் தமிழரின் ராப் இசையின் தோற்றம்
எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே.
வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. என்று பல பாடல்கள் இருக்கின்றன
அருணகிரி நாதர் கூட ராப் தான்பாடியிருக்கிறார்
ஆங்கில மோகத்தால் நாம் தான் நமது தொன்மையை அறியாமல் இருக்கிறோம்

 

Manikkavasagar Vaitialingam
-- 

Leave a Reply