• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிலாபத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து - ஏழு பேர் காயம்

இலங்கை

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று (21) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே கடவையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது கண்டெய்னர் லொறி மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து, இனிகொடவெல ரயில் கடவை மூடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply