தக் லைஃப் படத்தின் 2வது பாடல் சுகர் பேபி வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதற்கிடையே, 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் இரண்டாவது பாடல் 'சுகர் பேபி' வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மே 21ம் தேதி அன்று 'சுகர் பேபி' பாடல் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.























